மெக்ஸிகோவில் சிறுமி ஒருவர் தனது புலிக்குட்டியை சாலையில் வாக்கிங் அழைத்துச் சென்று அதிரவைத்துள்ளார்.
குவாசேவ் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் வங்கப்புலி குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் அவர் பணியிலிருக்க, அவரது மகள், நாயை வாக்கிங் அழைத்துச் செல்வது போன்று தாங்கள் வளர்க்கும் புலிக்குட்டியையும் வாங்கிக் கூட்டிச் சென்றுள்ளார். இதனைக் கண்டவர் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.