அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு - 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அறிவிப்பு

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்..? என்று நீண்ட காலமாக விவாதங்கள் நடந்த நிலையில், கடந்த மாதம் நடந்த செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.


தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தனித்தனியாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன. ஏற்கனவே கூறியதன்படி, இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் வேட்பாளர் மற்றும் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அறிவிக்கப்பட்டது.


எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக ஓ.பன்னீர் செல்வத்தால் அறிவிக்கப்பட்டார். அதே நேரத்தில், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அறிவிக்கப்பட்டது. அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம், ஆர்.காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ ஏ.சி.டி பிரபாகர், முன்னாள் எம்.பி பி.எச் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் பா.மோகன், முன்னாள் எம்.பி கோபால கிருஷ்ணன், சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம் ஆகிட 11 பேர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)