அதிக பணம் டெபாசிட் '-வாடிக்கையாளருக்கு ஸ்கெட்ச் போட்ட வங்கி மேலாளர்
வங்கியில் பணம் டெபாசிட் செய்ய வந்த வாடிக்கையாளரிடமிருந்து திட்டமிட்டு பணத்தை கொள்ளையடித்ததோடு அவரை கொலை செய்த குற்றத்திற்காக வங்கி மேனேஜர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானி ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிகில் குப்தா. இவர் அங்குள்ள விஸ்வகர்மா என்ற பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்திவருகிறார்.
இவர் ஏயூ வங்கியில் அடிக்கடி அதிக பணம் டெபாசிட் செய்வது வழக்கமாக வைத்திருக்கிறார். இதைப்பற்றி தெரிந்த வங்கி மேலாளர் வினீத் சிங் கவுர், ஆள் வைத்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி சேத்தான் சிங் மற்றும் ரிஷி ராஜ் ரிங் என்பவர்களை உத்தரப் பிரதேசத்துக்கு அனுப்பி துப்பாக்கியை வாங்கி வந்துள்ளார். ஏற்கனவே திட்டமிட்டதின்பேரில், திங்கட்கிழமை வங்கிக்கு பணத்தை டெபாசிட் செய்ய சென்று கொண்டிருந்த குப்தாவை சேத்தான் சிங் மற்றும் ரிஷி ராஜ் சிங் மிரட்டி பணத்தை கொள்ளையடித்தனர். அத்துடன் அவரை சுட்டுக் கொன்றனர். இவர்களுக்காக சற்று தூரத்தில் வாகனத்துடன் காத்திருந்த கௌதம் சிங், அபய் சிங் மற்றும் கடன் சிங் ஆகியோர் தப்பி சென்று விட்டனர்.
இந்தசம்பவம் நடந்த பகுதியிலிரந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில்கொள்ளையடித்து கொலை செய்த 5 பேரை கைது செய்தனர் அவர்களிடமிருந்து ரூபாய் 2.86 லட்சம் பணத்தையும் போலீசார் கைப்பற்றினர். அத்துடன் கொள்ளை மற்றும் கொலைக்கு முக்கிய காரணமான வங்கி மேலாளரையும் போலீசார் கைது செய்தனர்.