விதிமுறைகளுடன் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறதா..புகார்களை தெரிவிப்பது எப்படி.. பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு என்ன..

அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் விதிமுறைகளை பின்பற்றி நடக்கிறதா என்பதைக் கண்காணிக்குமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்போது சில விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என விரிவான விதிமுறை வழிகாட்டிகளை கடந்த ஜூலை மாதம் 29-ஆம் தேதி அரசு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், சமீப நாட்களாக ஆன்லைன் வகுப்புகள் குறித்து எழும் புகார்கள் குறித்து அரசியல் தலைவர்கள் சிலரும் அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள்.


இதையடுத்து, ஆன்லைன் வகுப்புகள் வழிகாட்டுதல்களை பின்பற்றி நடத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்குமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜிதாமஸ் வைத்யன் உத்தரவிட்டிருக்கிறார்.


அதேபோல, ஆன்லைன் வகுப்புகள் குறித்த புகார்கள் மற்றும் குறைகளைத் தெரிவிப்பதற்கு, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் உருவாக்கப்பட்ட grievancesredressaltnpta@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை விளம்பரப்படுத்தவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மன அழுத்தம் இருந்தால், பள்ளிக்கல்வித்துறையால் அமல்படுத்தப்பட்டு இருக்கும் 14417 என்ற உதவி எண்ணை பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம் என அறிவுறுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா