மாற்றுத்திறனாளிகள் சமூக நல கூட்டமைப்பு முப்பெரும் விழா வழக்கறிஞர் திண்டுக்கல் முகமது அனஸ் விருது வழங்கினார்

மதுரை மாவட்டம், ஐயர் பங்களா, கலைமகள் தெருவில் உள்ள தனியார் அரங்கில் தமிழக மாற்றுத்திறனாளிகள் சமூக நல கூட்டமைப்பின் சார்பாக முப்பெரும் விழா பாளர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு மதுரை மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் சுனாமி செந்தில் தலைமை ஏற்றார். மாவட்ட தலைவர் வீரராஜா வரவேற்றார்.


நிகழ்ச்சியில் தவழும் நிலையில் உள்ள 50-க் கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மதுரை டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் மாற்றுத்திறனாளிகள் தொழில் கூடத்தை மதுரை மருத்துவக் கல்லூரி தலைமை டாக்டர். விஜயலட்சுமி திறந்து வைத்தார்.


மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதுணையாக இருந்த சாதனையாளர் களுக்கு பர் களுக்கு உதவிக்கரம் விருது" கொடுத்து கவுரவிக்கப்பட்டது. விழாவின் சிறப்பு அழைப்பாளராக கூட்ட மைப்பின் மாநில தலைவர் வழக்கறிஞர் திண்டுக்கல் முகமது அனஸ் கலந்து கொண்டு நலத்திட்டங்கள், விருதுகள் வழங்கி பேசினார். :


மாநில செயலாளர் சோலார் செந்தில் குமார், செயற்குழு உறுப்பினர் திருமதி. சல்மா, சிவகங்கை மாவட்ட தலைவர் பேராசிரியர் சந்திர சேகர் ஆகியோர் கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொண்டனர். உலக சித்தர்கள் ஞானபீடம் தலைவர். தவத்திரு . கு. ரத்ன மாணிக்கம், மதுரை உதவும் உறவுகள் நிறுவனர் வழக்கறிஞர். முகமது ஜமால், ஜே.ஏ.எம். அரபிக் கல்லூரி நிறுவனர். அல்தாப் அலி, மதுரை வழக்கறிஞர் பாண்டிய ராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.


தமிழக மாற்றுத்திறனாளி கள் சமூக நல கூட்டமைப்பின் மாநில தலைவர் வழக்கறிஞர். திண்டுக்கல் முகமது அனஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: கொரோனா கால கட்டத்தில் கொரோனா காலகட்டத்தில் தமிழகத்தில் இருக்கும் மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களும், வசதி படைத்தவர்களும் எங்களின் மாற்றுத் திறனாளிகள் + சமூகத்தை ஏறெடுத்தும் பார்க்காத அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.


பொருளாதார பிரச்சினை ஒரு பக்கம் இருந்தாலும் சட்ட பாதுகாப்பு என்பது நாடு முழுவதும் இல்லாத சூழ்நிலை யில் தான் இருக்கிறது. எனவே மேற்படி உள்ள சூழ்நிலையில் நம் சமூகத்தின் மாற்றத்தில் நமது கூட்டமைப்பு எப்போதும் முதன்மையில் நிற்க தயாராக இருக்கிறது.


அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட அமைப்புக்கள் அனைவரும் நமது கூட்டமைப் பிற்கு ஆதரவு கொடுத்து இணைந்து செயல்பட்டால் நமக்கான உரிமைகளை நாம் உடனே பெற இயலும். நமது ஒற்றுமையை ஓங்கச்செய்ய மற்ற அமைப்பு களுக்கு நம் கூட்டமைப்பில் - சகோதர அமைப்பாக இணைந்து பணியாற்ற மாநில தலைமை சார்பாக அழைப்பு விடுக் கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா