எஸ்பிபியின் நிறைவேறாத ஆசை..

கல்லூரிப்பருவத்தில் பாடகி எஸ்.ஜானிகியால் அடையாளம் காணப்பட்டு, அவரின் அறிவுறுத்தலின் பேரிலேயே சினிமாவுக்கு பாட வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிர மணியம். குறுகிய காலத்திலேயே சிறந்த பின்னணிப்பாடகராக உருவெடுத்தவர் எஸ்.பி.பி. ஒரே நாளில் 19 பாடல்களை பாடும் அளவுக்கு தமிழில் பிசியாவிட்டார்.


‘பாடும் நிலா பாலு' என்று தமிழ் ரசிகர்களால் கொண்டா டப்பட்டார். 6 மணி நேரத்தில் 16 பாடல்களை பாடும் அளவுக்கு இந்தி யிலும் செம பிஸி. காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்குள் 21 பாடல்களை பாடும் அளவுக்கு கன்னடத்திலும் பிரபலம். திரைப்படங்களில் பாடுவதோடு மட்டும் அல்லாமல், இசைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுப்பாடுவதால், அவர் போகாத நாடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு உலகம் முழு வதும் சுற்றி வந்தார்.


ஆனாலும் அவர் போகாத ஒரே நாடு உண்டு. அதுதான் ரஷ்யா. அந்த ஒரு நாட்டுக்க்கும் சென்றுவிட வேண்டும் என்று நினைத்திருந்தார். எப்படியாவது ரஷ்யா வுக்கு போய்விட வேண் டும் என்றும், அதற்கான வாய்ப்பு அமைய வேண்டும் என்றும் நினைத்திருந்த வேளையில், கடைசி வரை அது நிறைவேறாமல் போய் விட்டது...


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)