"ஊர்க்காவல் படைக்கு சங்கம் அமைப்பது குற்றம்"- தமிழக அரசு தகவல்

ஊர்க்காவல் படையை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் சங்கம் தொடங்கியதையடுத்து அவருக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது எதிர்த்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.


இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்துறைச் செயலாளர் சார்பாக சென்னை மாநகர காவல் துணை ஆணையர் பெரோஸ்கான் பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.


அதில்ஊர்க்காவல் படை என்பது சட்டபூர்வமாக அதிகாரம் இல்லாத ஒரு தன்னார்வ அமைப்பு. காவல்துறைக்கே சங்கம் வைக்க சட்டப்பூர்வமான அனுமதி இல்லை.


இதில் ஊர் காவல் படைக்கும் சங்கம் அமைப்பது தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்துள்ளது. இதையடுத்து காவல்தறை பதிலுக்கு நாகேந்திரன் விளக்கம் அளிப்பதற்காக வழக்கு செப்டம்பர் 7-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


 


Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு