கந்தா... கஷ்டமப்பா...புலம்பும் அதிமுகவினர்!

புதியவரை எதிர்பார்த்த நிலையில், மீண்டும் அதே நபரை அதே பதவியில் அமர்த்து வது எப்போதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். அப்படித்தான் சென்னை புறநகர் அதிமுக மாவட்டச் செயலாளராக கே.பி.கந்தன் நிய மிக்கப்பட்டதைக்கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள் ளனர் அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள்.


2011ஆம் ஆண்டு சோழிங்கநல்லூர் தொகுதி யில் அதிமுக வேட்பாளராக நின்று வெற்றி அடைந்தவர் கே.பி.கந்தன். 'சோழிங்கநல்லூர் தொகுதி எனது கோட்டை' என்று அடிக்கடி சொல்வது இவரது வழக்கம். 2020ஆம் ஆண்டு சோழிங்கநல்லூர், ஆலந்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்த்து சென்னை புறநகர் மாவட்டம் தனி யாகப் பிரிக்கப்பட்டது. இந்த புறநகர் மாவட் டக் கழகச் செயலாளராக கந்தன் நியமிக்கப் பட்டுள்ளார்.


அவரது அதிகாரத்தின் கீழ் தனித்தனியாக பகுதிச் செயலாளர்களும் நியமனம் செய்யப் பட்டனர். சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழகச் செயலாளர் வி.குமார், சோழிங்கநல்லூர் வடக்கு பகுதி கழக செயலாளர் ஜானகிராமன், சோழிங்கநல்லூர்


மேற்கு பகுதி கழகச்செயலாளர் டி.சி.கர்ணா , ஆலந்தூர் கிழக்கு பகுதி கழகச் செயலாளர் வெங்கட்ராமன் என்று பலர் பதவி களைப் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரிட மிருந்தும் சுமார் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் கந்தன் வாங்கியதாகப் புகார் எழுந்துள்ளது.


"கரன்சி கந்தன் என்ற பெயர்தான் அதிமுக தொண்டர்களுக்கு அறிமுகம். சுமார் 20 ஆண்டு களுக்கு முன்னதாக சாராய வியாபாரம், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி போன்ற அனைத்து செயல்பாடுகளிலும் ஈடுபட்டவர். ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று கட்சியில் தொண்டராக இணைந்து அராஜகத்தில் ஈடுபட்டுகவுன்சிலராகஆனவர்.ஒருகாலகட்டத்தில் கட்டப்பஞ்சாயத்து என்றாலே கே.பி.கந்தன் என்று தெரிய வரும்பொழுது சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழகச் செயலாளராக பதவி யேற்றார். அதைத் தொடர்ந்து அவர் என்ன வெல்லாம் செய்தார், செய்வார் என்பது எல்லாரும் அறிந்ததுதான். இனிமேலும் இவரை எம்எல்ஏ வேட்பாளராக அறிவித்தால், கண்டிப் பாக திமுக வேட்பாளர்தான் வெற்றி பெறுவார்” என்று தெரிவித்தார் பெயர் குறிப்பிட விரும் பாத கட்சி நிர்வாகி ஒருவர்.


கட்சித்தலைமை புதிதாக பொறுப்புகளை வழங்குகிறபோது, இதுபோன்ற புகார்கள் எழு வது வாடிக்கையான விஷயம். ஆனால், அதை யும் மீறி கந்தனுக்கு எதிர்ப்பு இருக்கிறதா என்பதைச் சோதிப்பது எந்தவொருகட்சித்தலை மைக்கும் கடினமான விஷயமில்லை!-இனியவன்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)