”அர்ஜண்ட்டா ஒரு கால் பண்ணனும் போன் கிடைக்குமா” தனியாக செல்பவர்களிடம் நூதன திருட்டு!

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் தனியாக செல்பவர்களிடம் நூதன முறையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த இரு வாலிபர்கள் போலீசார் கைது செய்துள்ளனர்.


  மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில்குடி பகுதியில் உள்ள கருப்புசாமி கோவிலுக்கு வரும் நபர்களை குறிவைத்து, அவர்களிடம் அவசரமாக போன் செய்ய வேண்டும்


என்று பதற்றமாக இருப்பதுபோல் நடித்து, செல்போனை தாருங்கள் என தனியாக வருபவர்களிடம் செல்போனை வாங்கி ஒட்டம் பிடித்து நூதன முறையில் செல்போனை திருடி செல்வதாக நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது. image இதையடுத்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் இன்று அப்பகுதியில் மப்டியில் மறைந்து நின்று செல்போன் திருடர்களை பொறி வைத்து பிடிக்க மறைந்திருந்து கண்காணித்தனர்.


அப்போது, அவ்வழியே கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மதுரை பொன்மேனி பகுதியை சேர்ந்த அஸ்வின் என்ற வாலிபரிடம் செல்போன் திருடர்கள் வழக்கம் போல் அவசரம் என செல்போனை வாங்கி விட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது போலீசாரிடம் வசமாக சிக்கினர். 


தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்தது மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி (23), வேல்முருகன் (21) என தெரிய வந்தது.


இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 5 செல்போன்களை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)