சட்டப்பேரவை கூட்டத் தொடர் : எம்எல்ஏக்கள், ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை

சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 14ஆம் தேதி கூடவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளவர்களுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக பரிசோதனை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரவர் இல்லங்களுக்கு சுகாதாரத்துறையினர் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.


இதேபோல் எம்எல்ஏக்களுக்கும், ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்கும் அவர்களது இல்லங்களிலும், செய்தியாளர்களுக்கு தலைமை செயலகத்திலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.