இந்திய-சீன எல்லையில் நிலைமை சற்று பதட்டமாக இருக்கிறது என்று இராணுவ தலைமை ஜெனரல் எம்.எம்.நரவனே தெரிவித்துள்ளார்.


இந்திய-சீனா எல்லையில் நிலைமை சற்று பதட்டமாக இருக்கிறது. ஆனால் நமது வீர்ர்கள் உலகின் மிகச்சிறந்தவர்கள் என்று இராணுவ தலைமை ஜெனரல் எம்.எம்.நரவனே தெரிவித்துள்ளார்.


உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் இந்திய இராணுவம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார் இராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம். நரவனே. இந்திய-சீன எல்லை நிலைமை சற்று பதட்டமாக உள்ளது,


ஆனால் நமது வீரர்கள் மிகவும் உந்துதல் கொண்டவர்கள், எங்கள் அதிகாரிகளும் படைவீர்ர்களும் உலகில் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் நமது இராணுவத்தை மட்டுமல்ல, தேசத்தையும் பெருமைப்படுத்துவார்கள்


சில பகுதிகளில் நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நடக்கக்கூடிய அனைத்து செயல்களுக்கும் நமது துருப்புக்கள் தயாராக உள்ளன என்று தெரிவித்துள்ளார்