பேஸ்புக் நண்பர்களுடன் இணைந்து கொள்ளை: தலைமை தாங்கிய இளம் பி.இ பட்டதாரி பெண்

21 வ‌யது ‌இ‌‌‌‌ளம் ‌‌பட்டதா‌ரி பெண்‌ தலைமையில் ‌அரங்கே‌‌‌றிய ஒரு கொள்ளைச் ச‌ம்ப‌வம் கிருஷ்ணகிரியி‌ல் பெரு‌ம் பரப‌ர‌ப்பை ‌‌ஏற்படுத்‌தியுள்ளது‌‌‌.


கிருஷ்ணகிரி பி.இ (EEE) பட்டம், வீடு, சொகுசு கார் என பல்வேறு வசதிகளுடன் இருக்கும் ஒரு 21 வயது இளம் பட்டதாரி பெண் கொள்ளைக் கும்பலுக்கு தலைவி என்றால் நம்பமுடிகிறதா.


நம்பித்தான் ஆகவேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி வேலு நகர் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் பார்த்திபன், ஷர்மிளா தம்பதியினர்.


அதேகுடியிருப்புக்கு அருகில் தாய், தம்பியுடன் வசித்து வந்த பூமிகா என்ற 21வயது பட்டதாரி பெண் அத்தம்பதியினருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.


இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி பார்த்திபன் வேலைக்கு சென்ற நிலையில் சர்மிளா வீட்டில், பூமிகா பேசிக்கொண்டிருந்தார்.


அப்போது, 5 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் உள்ளே நுழைந்து சர்மிளா மற்றும் பூமிகாவை தாக்கி, அவர்கள் அணிந்திருந்த தாலி, கம்மல் உள்ளிட் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.


இதுகுறித்த புகாரின்பேரில், சிப்காட் போலிசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, கொள்ளைச் சம்பவம் குறித்து பக்கத்து வீட்டுப்பெண் பூமிகா அளித்த வாக்குமூலம் போலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.


அந்தப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது. கொள்ளை நடந்த அன்று 5 நபர்களுடன் பூமிகா ஒரு தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தது அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளில் தெரிந்தது.


இதைத் தொடர்ந்து பூமிகாவிடம் போலீசார் தங்கள் பாணியில் விசாரிக்கத் தொடங்கியதும் உண்மைகள் வெளிவந்தன. 


படித்து விட்டு வீட்டில் சும்மா இருந்த பூமிகா சொகுசாக வாழ ஆசைபட்டு தனது பேஸ்புக் நண்பர்களுடன் இணைந்து கொள்ளையடித்ததை விசாரணையில் பூமிகா ஒப்புக்கொண்டார்.


இதற்காக பக்கத்துவீட்டுப் ஷர்மிளா குறித்தும், அவரிடம் உள்ள நகைகள் குறித்தும் முன்கூட்டியே தெரிந்துவைத்திருந்த பூமிகா அதை கொள்ளையடிக்க திட்டம் தீட்டினார்.


இதற்காக பெங்களூரில் உள்ள தனது பேஸ்புக் நண்பரான பிரசாந்த்திடம் ஆசைவார்த்தை கூறி கொள்ளையுடிக்க நாள் குறித்தார்.


கொள்ளை நாளன்று துணி தைக்க வேண்டும் எனச் சொல்லி ஷர்மிளா வீட்டில் இருந்த பூமிகா, கொள்ளைச் சம்பவம் குறித்து ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடியதும் விசாரணையில் தெரிந்தது.


இதைத் தொடர்ந்து பூமிகா, பிரசாந்த் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த சஞ்சய், புட்டராஜு, கிரண் மற்றும் நாகராஜ் உள்ளிட்ட 6 பேரையும் சிப்காட் போலீசார் கைது செய்தனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)