சிறுவன் சிறுகாயமின்றி உயிர் தப்பிய அதிசய சம்பவம்

மனதை பதறவைக்கும் அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று ஆக்ராவில் நடைபெற்றுள்ளது. சிறுவன் மீது சரக்கு ரயில் ஒன்று ஏறி உள்ளது. அந்த நேரத்தில் பைலட் திவான் சிங் மற்றும் அவரது உதவியாளர் அதுல் ஆனந்த் ஆகியோர் இரண்டு வயது குழந்தையின் மீது சரக்கு ரயில் ஓடிக்கொண்டிப்பதை கவனித்தார்கள்.


அவர்கள் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தி ரயிலை நிறுத்த விரைந்தனர். ஆனால் ரயில் சிறுவனைக் கடந்து சென்ற பின்னரே நின்றது. அச்சத்துடன் திவான் மற்றும் அதுல் ரயிலிலிருந்து வெளியே குதித்து சந்தேகத்துடன் அந்த குழந்தை உயிருடன் இருக்கிறதா என்று பார்த்தனர்.


ஆனால் அதிசயமாக அந்த குழந்தை காயமடையவில்லை. இது ஹரியானாவில் ஃபரிதாபாத் மாவட்டத்தில் பல்லப்கர் ரயில் நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்தது. அந்த ரயில் நிலையம் எப்போதும் போல அன்றும் பிஸியாக இல்லை. சம்பவம் நிகழ்ந்த நாளில் கூட்டம் குறைவாகவே இருந்தது.


2 வயது சிறுவன் தனது 14 வயது சகோதரனுடன், ரயில்வே ஸ்டேஷனில் விளையாடி கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அந்த சிறுவனின் சகோதரன் வெளியே சென்று விட்டான். அவன் வெளியே செல்வதற்கு முன் அந்த சிறுவனை வேறு இடத்தில் அமர வைத்து விட்டு சென்றிருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை என்று ஆக்ரா டிவிஷனல் ரயில்வேஸின் கமர்ஷியல் மேனேஜர் எஸ் கே ஸ்ரீவஸ்தவா கூறினார்.