வன்முறையைத் தூண்டும் பேச்சுக்காக பா.ஜ.க எம்.எல்.ஏ-வை தடை செய்தது பேஸ்புக் : பா.ஜ.க ஆதரவு சர்ச்சை காரணமா

வன்முறை மற்றும் வெறுப்பை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு ஃபேஸ்புக்கின் கொள்கையை மீறியதற்காகத் தெலங்கானாவைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ, டி.ராஜா சிங்கை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்திலிருந்து ஃபேஸ்புக் நிர்வாகம் வியாழக்கிழமை தடை செய்துள்ளது.


மேலும் பா.ஜ.க எம்.எல்.ஏ டி.ராஜா சிங்கின் வெறுக்கத்தக்க பேச்சு அடங்கிய பதிவை ஃபேஸ்புக் நீக்கிவிட்டுக் கூறியதாவது, பா.ஜ.க எம்.எல்.ஏ "ஆபத்தான நபர்கள் மற்றும் ஆபத்தான அமைப்புகளின் கொள்கை" இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளார், எனவும் இவர் சம்பந்தப்பட்ட புகைப்படம், காணொளி, பதிவுகள், க்ரூப்கள், பக்கங்கள் என எதுவாக இருந்தாலும் இனி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தடை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


வன்முறையைத் தூண்டும் பேச்சுக்காக பா.ஜ.க எம்.எல்.ஏ-வை தடை செய்தது பேஸ்புக் : பா.ஜ.க ஆதரவு சர்ச்சை காரணமா? "வன்முறையை ஊக்குவிப்போர் அல்லது ஈடுபடுவோர் தொடர்பான எங்கள் கொள்கையை மீறியதற்காக நாங்கள் பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங்கை பேஸ்புக்கிலிருந்து தடை செய்துள்ளோம்" என்று பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட இந்தியாவை அதன் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகக் கருதும் ஃபேஸ்புக் - ஃபேஸ்புக்கின் உள்ளடக்கக் கொள்கைகள் இந்தியாவில் ஆளும் கட்சிக்குச் சாதகமாக இருப்பதாக அமெரிக்கப் பத்திரிக்கையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) அறிக்கை கூறியதை அடுத்து இந்த துரித நடவடிக்கை எனத் தெரிகிறது.


Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு