திருச்சியில் மனைவி, மாமியார் கழுத்தறுத்துக் கொலை கணவன் வெறிச்செயல்

திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர் தெருவில் வசித்து வருபவர் உலகநாதன். இவர் தனது மனைவி பவித்ரா (26). மாமியார் கலைச்செல்வி (60). மகள் அனுஷ்காவுடன் அங்கு வசித்து வந்தார்.


இவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுவதன் காரணமாக மருத்துவம் மேற் கொண்டு வந்துள்ளார். இந் நிலையில் ல் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் தனது மாமியார் மற்றும் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, வீட்டை சாத்தி தாழிட்டு தனது 2 வயது குழந்தை அனுஷ்காவுடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென் றுள்ளார்.


மாலைவரை வீடு திறக்காததை கண்டு அப் பகுதி பொதுமக்கள் திறந்து பார்த்துள்ளனர். அப்போது இருவரும் உயிரற்ற சடலமாக கிடந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த கண்டோன்மெண்ட் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.