நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தை ரத்து செய்யப்படும் முடிவிற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தை ரத்து செய்யப்படும் முடிவிற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


திரிணாமுல் காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினர் டெரெக் ஓ பிரையன்" அரசு இந்த தொற்றுநோயை காரணமாக பயன்படுத்தி ஜனநாயகத்தை கொலை செய்வதாக செய்வதாக கூறியுள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் "அரசாங்கத்தை கேள்வி கேட்பது பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூச்சுக்காற்று. ஜனநாயகத்தினை மூச்சுத்திணற செய்வதற்கு வலிமைமிக்க தலைவர்கள் தொற்றுநோயைப் பயன்படுத்துவார்கள் என்று நான் நான்கு மாதங்களுக்கு முன்பு சொன்னேன், கேள்வி நேரம் இருக்காது என்ற அறிவிப்பு இதனை அப்பட்டமாக சொல்கிறது. எங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதன் பெயரில் இதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும் , "என்கிறார்.


காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனது எதிர்ப்பைக் தெரிவிக்கும் வகையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.


எம்.பி ஓ'பிரையன் கூறும்போது " நாடாளுமன்றத்தின் 50 சதவீத நேரம் அரசாங்கத்துக்காகவும், மற்ற 50 சதவீதம் எதிர்க்கட்சிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக மக்கள் நாடாளுமன்றத்தை எம் அண்ட் எஸ் பிரைவேட் லிமிடெட் ஆக மாற்ற விரும்புகிறது (சுருக்கத்தை கண்டுபிடி!). வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியின் சிறந்த மரபுகளின் கீழ், நாடாளுமன்றம் எதிர்க்கட்சிக்கு சொந்தமானது என்று தெரிவித்துள்ளார். திமுக எம்.பி கனிமொழி தனது ட்வீட்டில் "முழு நேர அமர்வுக்கு கேள்வி நேரத்தை நிறுத்தி வைக்கும் பாஜக அரசாங்கத்தின் முடிவு ஒரு செய்தியை மட்டுமே தருகிறது - 'தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு கூட அ COVID-19 CASES தை கேள்வி கேட்க உரிமை  'ன்று கூறியுள்ளார்.


இந்த மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவை தனித்தனி ஷிப்டுகளில் இயங்கும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு இருக்கைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை முதல் நாள் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிறகு அக்டோபர் 1 ஆம் தேதி வரையிலும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும். மாநிலங்களவை முதல் நாள் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும், மீதமுள்ள நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் நடைபெறும், வார இறுதி நாட்கள் வேலை நாட்களாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்