பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு; காவல் பிரிவுக்கென முகநூல், ட்விட்டரில் பிரத்யேக பக்கம்: சென்னை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கென பிரத்யேக முகநூல், ட்விட்டர் சமூக வலைதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளன. இதை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று தொடங்கி வைத்தார்.


பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவுக்கான அலுவலகம் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ளது.


சென்னை காவல் மாவட்டத்தில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரும் இந்த பிரிவு போலீஸாருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு உரிய விழிப்புணர்வு, குற்றத்தடுப்பு மற்றும் புகார்களை பதிவு செய்ய பிரத்யேகமாக முகநூல் (Facebook ID, Greater Chennai Police – crime against women