வண்டலூர் வெளிவட்ட சாலையில் மனித கழிவுகளை சட்ட விரோதமாக கொட்டும் அவலம்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் பல ஆயிரம் நபர்கள் தினந்தோறும் செல்லும் முக்கிய சாலையாக கருதப்படுகிறது. இந்த சாலையில் தாம்பரம் வண்டலூர், பெருங்களத்தூா, முடிச்சூர், மண்ணிவாக்கம் சுற்றியுள்ள பகுதியில் இருந்து தினந்தோறும் மனித கழிவுகளை தணியார்க்கு சொந்தமான கழிவு நீர் லாரியில் ஏற்றி வந்து இந்த சர்வீஸ் சாலையில் கொட்டிவிட்டு செல்வதாக தொடர்ந்து பகுதி மக்கள் புகார்கள் தெரிவித்தனர்.


இந்த நிலையில் எஸ்.ஆர்.டி என்னும் பெயர் கொண்ட கழிவுநீர் லாரியில் மனித கழிவுகளை கொண்டு வந்து வண்டலூர் சர்வீஸ் சாலையில் கொட்டிவிடும் வீடியோ அந்த வழியாக சென்றவர் எடுத்து சமூகவலை தளங்களில் வெளியிட்டதால் வைரலாக பரவி வருகிறது. மேலும் அருகே உள்ள வயல் வெளிகளில் மனித கழிவு நீர் கலப்பதால் 


பயிர்கள் நாசம் ஆவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.