குறிப்பிட்ட மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம்: தமிழகத்தில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போலாகி விடும் ஐகோர்ட்டு கருத்து

ஒரு குறிப்பிட்ட மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது போன்ற தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தினால் அது எரிகிற தீயில் எண்ணெய் என்று ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. 


புதுச்சேரி மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு கீழ் கடந்த 2014ம் ஆண்டு வெடிகுண்டு வைக்கப்பட்டதுஅப்போது, நாராயணசாமி மத்திய மந்திரியாக இருந்தார்இதுகுறித்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்துதமிழ்நாடு விடுதலை படையை சேர்ந்த கலைலிங்கம் உள்பட பலரை கைது செய்தனர்


தற்போது புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலைலிங்கம்கொரோனா வைரஸ் தொற்று காலத்தை காரணமாக கூறி ஜாமீன் கேட்டு புதுச்சேரி முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.


இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன்ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். பின்னர், நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இனம், பிரதேசம், மதம், பிரிவினைவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டுக்கு எதிராக இளைஞர்களை தேசத்துரோகிகள் போராட செய்கின்றனர்.


இதற்காக வன்முறை, கலவரம் உள்ளிட்ட செயல்களில் இளைஞர்களை ஈடுபடுத்துகின்றனர். அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. பயங்கரவாதம், வன்முறை, கலவரம், மக்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்துவதில் தான் நம்பிக்கை வைத்துள்ளனர்.


ஒரு காலத்தில் தனி நாடு கேட்டு காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு, அமைப்பு, நாகாலாந்து நாகாலாந்து விடுதலைப்படை, உல்பா, மணிப்பூர் மக்கள் விடுதலைப்படைஎன்று பல பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டன. இந்த அமைப்புகளை எல்லாம் படிப்படியாக மத்திய அரசு ஒடுக்கிவிட்டது. இதேபோல, தமிழக எல்லை மற்றும் பல்வேறு மாநிலங்களில் நக்சல் அமைப்பினர் செயல்படுகின்றனர். இந்த அமைப்புடன் உயர்ந்த பதவியில் உள்ளவர்கள், கல்வியாளர்களும் கூட தொடர்பில் உள்ள னர்.


மனுதாரர் உறுப்பினராக உள்ள தமிழ்நாடு விடுதலை படை, தனி தமிழ்நாடு கொள்கை கொண்டது என்றும், இந்த சேதப்படுத்துவது, மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் என்றும் தேசிய புலனாய்வு முகமை தரப்பு வாதிட்டது. மேலும் புதுச்சேரி கோர்ட்டில் வழக்கு முடிவடையும் தருவாயில் உள்ளதால் மனுதாரருக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.


எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது. அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரரின் அமைப்பு வெளியிட்டுள்ள துண்டுபிரசுரத்தில், தமிழ்நாடு மற்றும் தமிழ்மொழி விடுதலை கோரிக்கையை மையமாக உள்ளது. இதுபோன்ற கொள்கைகளை கொண்ட அமைப்புகள், தன்னார்வ தொண்டு அமைப்பு என்ற முககவசத்துடன் சுதந்திரமாக செயல்படுகிறது. இவை தமிழகத்தில் நிம்மதி இல்லாத நிலையை உருவாக்குகின்றன. அதேநேரம், நல்ல எண்ணத்துடன், மக்கள் சேவை செய்யும் தன்னார்வ அமைப்புகளும் நம் நாட்டில் உள்ளது என்பதை மறுக்க முடியாது.


அண்மையில் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தில்கூட சீனாவை இங்குள்ளவர்கள் வெளிப்படையாக ஆதரித்தனர்இதுபோன்ற நபர்கள் இதுபோன்ற நபர்களை எல்லாம் ஆரம்பத்திலேயே ஒடுக்க வேண்டும்.


அதேபோல தமிழகத்தில், தமிழ் கலாசாரம், தமிழ்மொழிதமிழ் இனம் என்ற ஆயுதங்களுடன் பல அமைப்புகள் உள்ளன. இந்த ஆயுதங்களை கையில் தூக்க பல அரசியல் கட்சிகளும் காத்திருக்கின்றன.


இதுபோன்ற சூழ்நிலையில், ஒரு குறிப்பிட்ட மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது போலவும், பிற மொழிகள் மத்தியில் பாகுபாடுகளை உருவாக்குவது போலவும் ஒரு தோற்றத்தை மத்திய அரசு ஏற்படுத்தினால், அது கண்டிப்பாக எரிகிற தீயில் எண்ணெய்உருவாக்குகின்றன. அதேநேரம், நீதிபதி தேச விடுதலைக்காகவும், ஒற்றுமைக்காகவும் நம் முன்னோர்கள் சிந்திய ரத்தமும், உயிரும் வீணாகி போய்விடக்கூடாது. நம்நாடு பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், கலாசாரங்களை கொண்டது. எனவே, இவைகள் அனைத்தும் பாதுகாக்கப்படுகிறது என்ற எண்ணத்தை மக்களிடம் அரசு உருவாக்க வேண்டும். எனவே, நம் மொழி பாதுகாக்கப்படவில்லை .


குறிப்பிட்ட மொழிக்கு மட்டும் அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது என்ற எண்ணம் மக்களிடையே உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உலகில் மிகப்பெரிய ஜனநாயகத்தை பாதுகாக்கவும், தேசத்தின் நலன் மற்றும் ஒற்றுமை கருதி இந்த கருத்து தெரிவிக்கப்படுகிறது.


இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த உத்தரவின் இறுதியில், நீதிபதி ஆர்.ஹேமலதா தனியாக ஒரு உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதில், ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி என்.கிருபாகரன உத்தரவை ஏற்றுக்கொள்கிறேன். தமிழ்மொழி, தமிழ் அமைப்புகள், அதைத்தொடர்ந்து அரசுக்கு அவர்அதைத்தொடர்ந்து அரசுக்கு அவர் செய்துள்ள பரிந்துரைகளை நான் ஏற்கவில்லை. இவை வழக்கிற்கு தொடர்பு இல்லாதவை, மொழிகளை கற்றுக்கொள்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று கூறியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)