சொத்துக்காக தாயை கத்தியால் குத்திய கொலைகார மகன்!!

சொத்துக்காக மகனே, பெற்ற தாயை கொடூரமாக தாக்கும் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் 70 வயதான ஆலயம்மாள்.


இவருக்கு 4 மகன் ஒரு மகள். இதில் மூத்த மகன் பூபதி கூலி வேலை செய்து வருகிறார். இவர் பல நாட்களாக தன் தாயிடம் சொத்தைப் பிரித்துக் கொடுக்க சொல்லி சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி இரவு தன் வீட்டில் இருந்த தாய் ஆலயம்மாளிடம் சொத்தை பிரித்து கொடுக்கும்படி தகராறு செய்துள்ளார்.


அதற்கு ஆலயம்மாள் இப்பொழுது சொத்தை பிரிக்க முடியாது என்று கூற ஆதிரமடைந்த மகன் பூபதி தான் மறைத்துவைதிருந்த கத்தியை எடுத்து தன் தாயின் கழுத்து,கை, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் குத்த ஆரம்பித்தார். வலி தாங்க முடியாமல் ஆலயம்மாள் கதற... விடாமல் கத்தியை எடுத்து, தன்னை 10 மாதம் சுமந்த வயிற்றில் குத்தி பெற்ற தாயை கொல்ல நினைத்தான் அந்த ஈவு இரக்கமற்ற கொடியவன், காரணம் பணம்...


தாயை சாகடிக்க நினைத்து சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பினான் தப்பிப்பிறந்த மகன் பூபதி... ஆலயம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் ஆலயம்மாள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் தாயை குத்திவிட்டு தப்பிய மகன் பூபதியை ஓட்டேரி போலீசார் கைது செய்தனர்...


பெற்ற தாயை மகனே கத்தியால் குத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.