கிராம சபை கூட்டத்திற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

தமிழ்நாட்டில், மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை, உள்ளாட்சித்துறை வெளியிட்டுள்ளது.


காலை 11 மணியளவில், கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று அதில், அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராம சபை, பாதுகாப்பான பொது வெளியிலோ, அல்லது, நல்ல காற்றோட்டமான கட்டிடத்திற்குள்ளாகவோ நடத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.


கூட்டத்தில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன், 6 அடி இடைவெளி விட்டு அமர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.