சசிகலா வருகை குறித்து கேள்வி: பதில்சொல்லாமல் பின்வாங்கிய அமைச்சர்

சிவகங்கை மாவட்டத்தில் அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்கை முகாம் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் , ‘இந்த கூட்டத்திற்கு இவ்வளவு பேர் வந்து உள்ளனர்.


இங்கு சமுக இடைவெளியோடுதான் உட்கார்ந்து உள்ளோம். ஆனால் அடி இடைவெளி கொஞ்சம் இல்லாமல் இருகின்றது. ஆனால் வெளியில் இருந்து உள்ளே வரும் போது டிஜிட்டல் தெர்மா மீட்டரை வைத்து சோதித்து உள்ளே அனுப்பினார். உள்ளே வந்த பிறகு சானிட்டரி எல்லாம் வைத்து உள்ளனர்.


மற்ற மாவட்டங்களை விட சிவகங்கை மாவட்டச் செயலாளர் செந்தில் நாதன் ஒருவர் தான் தொண்டர்களை எப்படி நடத்த வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்று அன்போடு வைத்து உள்ளார்’ என்று தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், ‘எம்.ஜி.ஆரை உள்நோக்கம் இல்லமால் அரசியல் நோக்கம் இல்லாமல் யார் வேண்டுமானலும் சொந்தம் கொண்டாடலாம்.


என்றார். அதைத்தொடர்ந்து, சசிகலா வருகையால் அ.தி.மு.கவில் மாற்றம் நிகழுமா கேள்விக்கு திடீரென்று பின்வாங்கினார். அதைப் பற்றி பேச முடியாது என்று தெரிவித்தார். அதுகுறித்து தலைமைக் கழகத்தில் யாரும் சொல்லுவதில்லை. விவாதிக்கவில்லை என்றார்.


எப்போதும் அதிரடியாக பேச கூடிய ஆர்.பி.உதயகுமார் சில நாட்கள் முன்னர் கூட மதுரையை இரண்டாவது தலைநகராக்கவேண்டும் என்று கருத்தை முன்வைத்தார். அதன்பின் முதல்வர் பழனிச்சாமி, இரண்டாம் தலைநகர் அமைச்சரின் தனிபட்ட கருத்து என்று சொன்னவுடன் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!