எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடி கரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகருக்கு, உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியது.


கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வருத்தம் தெரிவித்திருந்த எஸ்.வி. சேகர், வாழ்நாள் முழுவதும் இனி ஒருபோதும் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டேன் என உத்தரவாதம் அளித்திருந்தார்.


இதனை, காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞரும் ஏற்றுக் கொண்டார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேவைப்படும் போது காவல் துறையில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் எஸ்.வி சேகருக்கு நீதிபதி முன்ஜாமீன் வழங்கினார்.