விளையும் பயிர் முளையிலேயே தெரியும்... கொரோனா விடுப்பில் பூ கட்டி பெற்றோருக்கு உதவும் மாணவர்கள்

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்று சொல்வது போல, கொரோனா விடுப்பு காரணமாக பள்ளிக்கு விடுப்பு என்பதால் சிறுவர்கள் காலத்தை வீணடிக்காமல் பூ கட்டும் தொழிலில் பெற்றோருக்கு உதவி வருகின்றனர்.


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள இராமாபுரம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் சிறிய அளவில் பூ மாலை கட்டி விற்பனை செய்து வருகின்றார். இவரது மகன் மதியழகன் அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறான்.


தற்போது, கொரோனா விடுப்பு என்பதால் மதியழகன் பள்ளிக்கு செல்லவில்லை. ஆனாலும் , நேரத்தை வீணடிக்க விரும்பாத மதியழகன் விடுப்பு காலத்தில் தந்தைக்கு பூ கட்டும் தொழிலில் உதவி வருகிறான்.


அதே போல, சிறுவனின் நண்பர்களான ரூபேஷ் , கார்த்தி ஆகியோரும் மாலைகள் கட்டும் பணியில் ஈடுபடுகின்றனர். சிறுவர்களாக இருந்தாலும் விளையாட்டுத்தனம் இல்லாமல் புத்திசாலித்தனத்துடன் செயல்படும் இவர்களை பார்க்கம் மக்கள் மனம் விட்டு பாராட்டி வருகின்றனர்.


சிறுவர்கள் தொழில் நேர்த்தியுடன் பூ கட்டும் பணியில் ஈடுபடுகின்றர். மாலைகளும் நேர்த்தியாக இருப்பதாக வாடிக்கையாளர்களும் திருப்தி தெரிவிக்கின்றனர்.


இது குறித்து மாணவன் மதியழகன் கூறுகையில், '' கொரோனா ஊரடங்கு காரணமாக எங்கள் குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது.


கோயில்கள் மூடப்பட்டது. நல்ல காரியங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதனால், குடும்பத்துடன் நாங்கள் கஷ்டப்பட்டோம். இப்போது கடை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதால்,எங்களால் கொஞ்சம் வருமானம் ஈட்ட முடிகிறது. இப்போது, நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து தந்தைக்கு பூ கட்டி கொடுப்பதால் கூலிக்கு ஆள் வைத்து பூ கட்டும் செலவு எங்களுக்கு மிச்சமாகிறது.


என் தந்தையின் சிரமத்தை போக்க சிறிதளவு எங்களால் முடிந்த சிறு உதவியை நாங்கள் செய்கிறோம் . பிற்காலத்தில் படித்து பட்டம் பெற்று வேறு வேலைக்கு சென்றாலும் எங்கள் குடும்பத்தினர் காலம் காலமாக செய்துவந்த இந்த தொழிலை நாங்கள் மறக்க மாட்டோம் ''என்கிறான் பெரிய மனுசத்தனமாக.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)