மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை

மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த, காவல் உதவி ஆய்வாளர் மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


தல்லாகுளம் பட்டாலியன் காவல்குடியிருப்பை சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர் முருகசுந்தரம் என்பவரின் மகள் ஜோதி துர்கா. இவர் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி மதிப்பெண் குறைவாக பெற்ற நிலையில், இந்த ஆண்டிற்கான நீட் தேர்விற்கு படித்துகொண்டிருந்தபோது நேற்று இரவு தனது தந்தையிடம் தேர்வு குறித்து அச்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் அதிகாலையில் தேநீர் வழங்குவதற்காக ஜோதியின் அறையை திறந்தபோது, அவர் மின்விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.


இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.