இரு முதியவர்களை செருப்பால் அடித்த அராஜக அரசு ஊழியர்..! போலீசுக்கு பயந்து ஓட்டம்

புதுச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளியையும் அவரது மனைவியையும் மாடுவளர்க்கும் அரசு ஊழியர் ஒருவர் செருப்பால் அடித்து விரட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


நடக்க இயலாமல் தள்ளாடும் வயதானவர்களை அடித்து விரட்டிய அராஜக அரசு ஊழியர் போலீசுக்கு பயந்து ஊர் ஊராக ஓடி வரும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்திதொகுப்பு..


புதுச்சேரி அடுத்த தட்டாஞ்சாவடி ராமலிங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் டி.எஸ்.சரவணன். புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் பணிபுரிந்துவரும் இவர் சொந்தமாக மாடு வளர்த்து வருகிறார்.


மாடுகளிடம் இருந்து பாலை மட்டும் கறந்துவிட்டு மேய்சலுக்காக வெளியில் விரட்டிவிடுவது வழக்கம். அவரது மாடுகள் அருகில் உள்ள ஜெயா நகர் மற்றும் அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள செடிகொடிகளை மேய்ந்து விடுவது வழக்கம். ஜெயா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் அடிக்கடி அவரது மாடுகள் நுழைந்து மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளது.


இதனை கண்டு அங்கு காவலாளியாக வேலைபார்த்துவரும் 65 வயதான சுப்புராயனும் அவரது மனைவி லட்சுமியும் மாடுகளை விரட்டியுள்ளனர். மேலும் அரசு ஊழியர் சரவணனிடம் சென்று மாடுகளை கட்டிபோட்டு வளர்க்க கூடாதா ? என்றும் கேட்டுள்ளனர்.


இதனால் ஆத்திரமடைந்த சரவணன், நடுரோட்டில் கணவன்-மனைவி இருவரையும் சரமாரியாக செருப்பால் அடித்து விரட்டியுள்ளார்.


இரு முதியவர்களையும் வீதியில் வைத்து செருப்பால் அடிக்கும் கொடுமையான சிசிடிவி காட்சிகள் வெளியானதை தொடர்ந்து சரவணன் மீது கோரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


போலீசார் தேடிவருவதை அறிந்த அரசு ஊழியர் சரவணன் முன் ஜாமீன் பெறும் வரை போலீசில் சிக்கிவிடக்கூடாது என ஊர் ஊராக உறவினர் வீடுகளுக்கு தப்பி ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.


எளியாரை வலியார் வாட்டினால் அந்த வலியாரை புரட்டி எடுக்க மிக வலியாராக நமது சட்டமும் காவல்துறையும் உள்ளது என்பதை டி.எஸ்.சரவணன் போன்ற அராஜக அரசு ஊழியர்கள் உணரவேண்டும்..!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்