நீட் தேர்வை எதிர்த்து பாடை கட்டி, மலர் வளையம் வைத்து திமுக-வினர் நூதன போராட்டம்

தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி இன்று போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் பகுதியில் திமுக இளைஞணி மாவட்ட பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பபட்டது. இதனை தொடர்ந்து மருத்துவ மாணவர் உருவத்திற்கு பாடை கட்டி அதற்கு மலர் வளையம் வைத்து திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை புறாக்களின் காலில் கட்டி பிரதமருக்கு தூது விட்டும் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் எனவும் , நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவகனவு கலைந்து போனதுடன், பலர் உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவித்தனர். நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டதின் போது அவர்க