விடுப்பு அளிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் மூத்த உதவி ஆய்வாளரை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் படாவுன் மாவட்டத்தில் உள்ள உஜ்ஹானி காவல்நிலையத்தில் கான்ஸ்ட பிளாக பணிபுரிந்து வருபவர் லலித் குமார் (25). இவர் தனக்கு விடுமுறை வேண்டும் என கடிதம் காவல் ஆய்வாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் காவல் ஆய்வாளர் பாண்டே கொரோனா தொற்று காரணமாக விடுப்பில் உள்ளார். இதனால் விடுப்பு அளிக்கும் அதிகாரம் மூத்த உதவி ஆய்வாளரான ராம் அவுதார் (50) என்பவரிடம் வழங்கப்பட்டிருந்தது.


லலித் குமாரின் விடுப்பு கடிதத்தை பார்த்த ராம், அவருக்கு விடுப்பு வழங்க மறுத்துள்ளார். அத்துடன் காவல் ஆய்வாளர் மீண்டும் பணிக்கு வந்த பின்னர் தான் விடுப்பு அளிப்பது குறித்து முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார், இந்நிலையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஆய்வாளர் பாண்டே இன்று மீண்டும் பணியில் சேர்ந்தார். அவரது அறைக்கு சென்ற லலித் குமார் தனது விடுப்பு குறித்து தெரிவித்துள்ளார். ஆய்வாளரும் லலித் குமாருக்கு விடுப்பு வழங்கிவிட்டார்.


அப்போது ஆய்வாளர் அறையில் இருந்து வெளியே வந்த லலித் குமாரை தகாத வார்த்தைகளில் உதவி ஆய்வாளர் ராம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ராம் குமாரின் வயிற்றில் சுட்டுள்ளார். இதுவரை துப்பாக்கியால் சுட பயிற்சி கூட எடுக்காத லலித், ஆத்திரத்தில் ஆய்வாளரை சுட்டதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த ராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். லலித் குமாரை கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)