சவூதி அரேபியா மன்னர் சல்மானுடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை

சவூதி அரேபியா மன்னர் சல்மானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.


இருநாட்டு வளர்ச்சி வர்த்தகம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர். ஜி 20 உறுப்பு நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள பொருளிய சவால்கள் குறித்தும் இருதலைவர்கள் விவாதித்தனர்.


இதுகுறித்து டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட மோடி, அண்மைக்காலங்களில் சவூதியுடன் இந்தியாவின் நட்புறவு அபார வளரச்சியடைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


நோய்த் தொற்று பாதிப்பு காலங்களில் சவூதியில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அனுப்பி வைக்க சவூதி அரசு அளித்த ஒத்துழைப்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்ததாகவும் இருதரப்பினரும் இந்தியா-சவூதி நட்பை மேலும் வலுப்படுத்த உறுதி கொண்டிருப்பதாகவும் பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா