பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய இளைஞர்- கைது செய்த காவல்துறையினர்


திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் கிராமத்தில் பட்டா கத்தியுடன் பிறந்தநாள் கொண்டாடிய இருவ செய்யப்பட்டுள்ளனர்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி என்பவரின் மகன் சுரேஷ். இவர் தனது நண்பர்களுடன் நேற்றிரவு பிறந்தநாள் விழா கொண்டாடினார். அப்போது அவர் பட்டாக்கத்தியைக் கொண்டு கேக் வெட்டினார். அதனை வீடியோவாகவும் சமூக வலைதளங்களிலும் வெளியிட்டார்.


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்த, வீடியோ பிரம்மதேசம் காவல்துறையினருக்குச் சென்றது. இதனையடுத்து சுரேஷ் மற்றும் விஜயராஜன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.