சென்னை OMR சாலையில் தறிகெட்டு ஓடிய கார் தூக்கி வீசப்பட்ட பெண்

சென்னை - OMR துரைப்பாக்கம் சர்வீஸ் சாலையில் தறிகெட்டு ஓடிய கார், எதிரே இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், பெண் உள்பட 2 பேர் தூக்கி வீசப்படும் சிசி டிவி காட்சி, வெளியாகி உள்ளது.


மேட்டுக்குப்பம் என்ற இடத்தில் கடந்த 9 ஆம் தேதி, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பெண், லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


காரை ஓட்டி வந்த துரைப் பாக்கத்தைச் சேர்ந்த 62 வயது நபர் சுப்பாராவ் என்பவரிடம் விசாரணை நடத்திய காவல் துறையினர், விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.


வீட்டில் இருந்து புறப்பட்ட போதே, இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது மோதிய சுப்பாராவ், தம்மை பொது மக்கள் தாக்கக்கூடும் என்ற அச்சத்தில் அதிவேகமாக காரை ஓட்டி, இந்த விபத்தை ஏற்படுத்தியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு