உண்மையை சொன்ன மாணவிக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு

புதுச்சேரியில் கொரோனா பாதித்த மாணவியை ஜிப்மர் நர்சிங் தேர்வு எழுத அதிகாரிகள் மறுத்துள்ளனர். புதுச்சேரி ஜிப்மரில் பிஎஸ்சி நர்சிங் படிப்பு சேர்க்கைக்கு நாடு முழுவதும் கடந்த 22ம் தேதி ஆன்லைன் நுழைவுத்தேர்வு நடந்தது. மூலக்குளம் தனியார் கிறிஸ்ட் கல்லூரி தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய உப்பளத்தை சேர்ந்த பவித்ரா என்ற மாணவி சென்றார்.


அங்கு தனதுக்கு கொரோனா தொற்று உள்ளது என்பதை மறைக்காமல் தேர்வு அலுவலரிடம் தெரிவித்தார். இதனையடுத்து தேர்வு அறைக்குள் அவரை அனுமதிக்க மறுத்தனர். நுழைவுத்தேர்வு விதிமுறையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் தனியக அமர்ந்து தேர்வு எழுதலாம் என குறிப்பிட்டுள்ளதை அவர் கூறியும், மாணவியை தேர்வு எழுத தேர்வு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.


இதனால் அந்த மாணவி தேர்வு எழுதாமல் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு சென்றார்.நேர்மையாக கொரோனா தொற்று இருப்பதை கூறியதால் தனக்கு தண்டனையா...? என கேட்கிறார் மாணவி பவித்ரா. 2 ஆண்டுகளாய் தனது மகள் பயிற்சி பெற்றதாகவும் தனது மகளை மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என மாணவியின் தந்தை ரவி வலியுறுத்துகிறார். .


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு