ஆன்லைனில் லோன் விண்ணப்பித்த பெண்ணின் அந்தரங்கங்களை திருடி மிரட்டிய கும்பல்..!

திருப்பி செலுத்தாத கடனுக்காக இளைஞர்களின் அந்தரங்க விஷயங்களை எடுத்து மிரட்ட ஆன்லைன் லோன் அப்ளிகேஷன்கள் தொடங்கியுள்ளன . சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிப்புரிபவர் 25 வயதான, பெண் ஒருவர் கொரோனா ஊரடங்கு காரணமாக கையில் இருக்கும் பணத்தை கொண்டு சில நாட்களை ஓட்டியுள்ளார்.


ஆனால் அதன்பிறகு சமாளிக்க முடியாததால் விளம்பரங்களில் வந்த ஆன்லைன் அப்ளிகேஷன் மூலமாக லோன் பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். ஐ கிரெடிட் என்ற ஆன்லைன் லோன் அப்ளிகேஷனை பதிவேற்றம் செய்து அதில் 20,000 லோன் பெற்றுள்ளார். கடன் பெற்றதிலிருந்து ஏழு நாட்களில் 7000 வட்டியுடன் இருபதாயிரத்தையும் சேர்த்து கட்டுவதற்கான திட்டத்தை அவர் தேர்வு செய்துள்ளார். ஏழு நாட்களுக்குப் பிறகு பணம் கட்ட தவறியதால் சில விபரீதங்களை சந்தித்துள்ளார் அந்தப் பெண்.


பணம் கட்டச் சொல்லி தொடர் தொலைபேசி அழைப்புகள் வர தொடங்கியுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த பெண்னின் தொலைபேசியில் உள்ள அனைத்து தொடர்பு எண்களுக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து இந்தப் பெண்ணின் விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளது.


அதுமட்டுமில்லாமல் பெண்ணின் தொலைபேசியில் உள்ள சில அந்தரங்க புகை படங்களை அவருக்கே வாட்ஸ் அப் செய்துள்ளது அந்த கும்பல். லோன் கொடுத்த அப்ளிகேஷன் தரப்பு , இதுபோன்று மிரட்டுவது எங்கள் வழக்கம் இல்லை என்றும் பணம் வசூலிக்கும் ஏஜென்சிஸ் இது போன்று செயல்பட்டிருப்பதாகவும் விளக்கம் கொடுத்துள்ளது.


மேலும் இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு மையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார் பாதிக்கப்பட்ட அந்த பெண் இளைஞர்களே இது போன்று அப்ளிகேஷன்களில் லோன் பெறுவதால் இதுபோன்று அவமானப்படுத்துவதன் மூலம் தங்கள் கடனை திரும்ப பெறலாம் என்று இந்த தந்திரத்தை அப்ளிகேஷன்கள் பின்பற்றுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


முறையான அனுமதி மற்றும் அலுவலகம் இல்லாததால் எங்கிருந்தோ இயங்கும் இத்தகைய கும்பல்கள் இது போன்ற விதிமுறை மீறல்களில் ஈடுபடுகிறது. இது போன்ற சிக்கல்களில் சிக்காமல் இருக்க ஆன்லைன் லோன் பெறாமல் இருப்பதே சிறந்த வழி என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!