சிறுமி ஏற்படுத்திய வாகன விபத்து.. எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி..!

சென்னையில் 15 வயது சிறுமி உட்பட 3 இளம் சிறார்கள் சென்ற இருசக்கர வாகனம், மற்றொரு வாகனத்தின் மீது மோதிய விபத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் பலியானார்.


சிறுமியை வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மெரினா காமராசர் சாலையில் ஞாயிறு அதிகாலை 5 மணியளவில் 2 இருசக்கர வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து ஏற்பட்டது.


இரண்டு வாகனங்களிலுமே விதிகளை மீறி தலா மூன்று பேர் பயணித்த நிலையில், காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


தலையில் படுகாயமடைந்த, வேலூரைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் லெனின் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.


சத்தீஸ்கரில் பணிபுரிந்த அவர், தந்தையின் இறுதி சடங்கிற்காக வந்த நிலையில், சென்னையில் உள்ள தனது மனைவியை சந்திக்க உறவினர்களுடன் வந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை 15


வயது சிறுமி ஓட்டி வந்ததும், அவருடன் 16 வயது சிறுவன் மற்றும் 13 வயது சிறுமியும் பயணித்ததும் தெரிய வந்தது. சிறுமி மீது விபத்தின் மூலம் மரணத்தை விளைவித்தல் எனும் பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சிறுமியை வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர் மீதும் மோட்டார் வாகனச் சட்டம் 180 -ன் படி வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


கடந்த 2017 முதல் 2019 வரையிலான கால கட்டத்தில், விதிகளை மீறி வாகனம் ஓட்டி சிறுவர்கள் ஏற்படுத்திய விபத்துகளின் மூலம் சுமார் 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.


சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் பெற்றோர் மட்டுமல்ல வாகன உரிமையாளர் மூன்றாம் நபராக இருந்தாலும் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு