மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன்ஜாமீன் கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.

மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்கள் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த 15 மனுக்கள், நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு எளிதாக முன்ஜாமீன் கிடைப்பதால் மணல் கடத்தல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் தமிழகத்தில் கனிம வளமே இல்லாமல் போகும் சூழ்நிலை உருவாகி, குடிதண்ணீருக்கு அடுத்த தலைமுறை திண்டாட வேண்டியது நிலை உருவாகும் எனக் கூறினார்.


மேலும் முன்ஜாமீன் நிபந்தனையாக 25 ஆயிரம் ரூபாய் விதித்தாலும், அதை செலுத்த கும்பல் தயங்குவதில்லை என்றும் எளிதாக கிடைக்கும் முன்ஜாமீனால் மணல் கடத்தலில் ஈடுபடுவோர் தைரியமாக ஈடுபடுகின்றனர் என்றும் கூறினார்.


இது மட்டுமன்றி இனி மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு முன்ஜாமீன் கிடையாது என்றும் சில காலம் சிறையில் இருந்தால் தான் கடத்தலில் ஈடுபடுவோருக்கு பயம் வரும் எனக் கூறி முன்ஜாமீன் கோரிய மனுக்களை செப்டம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)