சமூக ஆர்வலர் கேட்ட கேள்விக்கு தகவல் தர இயலாது நெடுஞ்சாலைத்துறை பதில்..


தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி கேட்ட அனைத்து விவரங்களையும் தர இயலாது என்பதை விதி 8 (13)ன்படி பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவித ஒளிவு மறைவும் இல்லை சாலை பணியின் திட்ட மதிப்பீடு திட்டக் காலம் வரை படம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விரைவில் பொதுமக்கள் பார்வையில் வைக்கப்படும் என்று என்றார் கோட்ட பொறியாளர் வடிவேல்.


தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி கேட்கப்பட்ட கேள்விக்கு விவரம் தர இயலாது என்று நெடுஞ்சாலைத்துறை பதில் அளித்துள்ளது. திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் அடிக்க நிகழ்ந்த விபத்துக்களால் இந்த சாலை விரிவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் &வாகன ஓட்டிகள் நீண்டகால கோரிக்கை உள்ளது. இதையடுத்து குடமுருட்டி பாலம் முதல் அந்தநல்லூர் வரை 11 கிலோமீட்டர் தூரம் 55 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன இதை பலரும் வரவேற்க வரவேற்பதாக சொல்கிறார்கள் தனியார் நிறுவன ஊழியரான ராஜசேகர்.


அடிக்கடிவிபத்துக்கள் ஏற்படும் இந்த சாலை பாதுகாப்பு குறைபாடுகள் அதிகமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


இத்திட்ட பணிகள்தொடர்பான திட்ட அறிக்கையை தொடங்கி, விரிவாக்கப் பணியின் முழு விவரங்களையும் அளிக்குமாறு, சாலை பணியாளர் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சமூக ஆர்வலருமான அய்யாரப்பன் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விவரம் கேட்டு நெடுஞ்சாலைத்துறை திருச்சி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் விண்ணப்பித்தா.


"இதற்கு" இச்சாலை பணிகள் தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்டம் கீழ் தர இயலாது" என்று நெடுஞ்சாலைத்துறையிடமிருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.


 இதுகுறித்து மேல் மறையீடு செய்ய உள்ளதாக அய்யா ரப்பர் கூரியுள்ளார் இதேபோல திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை குறித்து நெடுஞ்சாலை துறை அலுவலகம் சென்று விளக்கம் கேட்ட சமூக ஆர்வலர் அல்லூர் சீனிவாசன் என்பவர் மீது ஒப்பந்ததாரர் தரப்பினர் தாக்குதல் நடத்தியதாக திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சாலை விரிவாக்கப் பணிகள் குறித்து வெளிப்படையாக அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தகவல்கள் பலகையை வைக்காமல் இருப்பதும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கேட்டதற்கு பதில் தராமல் இருப்பதும் சந்தேகத்தை தருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


இதுகுறித்துநெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பொது தகவல் அலுவலர் வடிவேலுவிடம் கேட்டதற்கு சாலை விரிவாக்கப் பணியில் எந்த குற்றச்சாட்டும் இடமில்லை தகவல் உரிமை சட்ட அனைத்து விவரங்களையும் தர இயலாது என்பதை விதி 8(13)ன்படி பதில் அளிக்கப்பட்டுள்ளது இதில் எந்தவித உரிமையும் இல்லை சாலை பணியின் திட்ட மதிப்பீடு திட்டக் காலம் வரை படம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)