செல்போன் திருடர்களைப் பிடிக்கச் சென்ற போலீஸ்காரர் மீது தாக்குதல்..

புதுச்சேரி திருக்கனூர் குமாரபாளையத்தில் சாராயக்கடை உள்ளது. இந்த சாராயக்கடையில் ஆனந்தன்(40) என்பவர் காசாளராகப் பணியாற்றி வருகிறார்.


கடந்த 4ம் தேதி சாராயக்கடையில் வேலை முடித்துவிட்டு ஆனந்தன் அங்கேயே படுத்துத் தூங்கியுள்ளார். அப்போது அவர் தனது பேன்ட் சட்டையைக் கழற்றி அங்குள்ள கம்பியில் மாட்டி விட்டு கைலி கட்டிக்கொண்டு தூங்கியுள்ளார்.


அந்த சமயத்தில் அங்கு வந்த 3 பேர் சட்டையில் இருந்த ரூ.10,000 ரொக்கப் பணம், 2 செல்போன்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.


இதுகுறித்து காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பணத்தைப் பறித்துச் சென்றவர்களைத் தேடி வந்தனர். அங்குள்ள கண்காணிப்புக் கேமரா மூலம் சோதனையிட்டதில், புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியில் உள்ள வழுதாவூவில் ரவுடித்தனம் செய்துவரும் விக்னேஷ் (20), அசோக் (19) ஆகியோருடன் ஒரு சிறுவன் இருந்தது தெரியவந்தது.


இந்த நிலையில் காட்டேரிக்குப்பத்தில் ஓர் இடத்தில் அவர்கள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதனையடுத்து பணியில் இருந்த போலீஸ்காரர்கள் அவர்களைப் பிடிக்கச் சென்றனர். அப்போது விக்னேஷ் மற்றும் அசோக் ஆகியோர் போலீஸ்காரர் சக்திவேல் என்பவரை கீழே தள்ளி கல்லால் அவரது மண்டையை உடைத்துள்ளனர்.


இதில் அவர் படுகாயம் அடைந்தார். இருப்பினும் அவர்கள் போராடி 3 பேரையும் விரட்டிப் பிடித்து கைது செய்துள்ளனர். காயமடைந்த போலீஸ்காரர் சக்திவேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


3 பேரையும் போலீசார் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)