சாலை விபத்துகளில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் தமிழகம் - மோசமான சாலைகளே முக்கிய காரணம்

தமிழ்நாடு சாலை விபத்துகளில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் தமிழகம் - மோசமான சாலைகளே முக்கிய காரணம்?! இந்தியாவில் தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாகச் சாலை விபத்து எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது தமிழ்நாடு.


தமிழ்நாடு தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகச் சாலை விபத்தில் முதலிடம் பிடித்து வருகிறது. 2019ம் ஆண்டில் மட்டும் 57,228 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தைத் தொடர்ந்து மத்திய பிரதேசம் இரண்டாம் இடத்தில் 51,641 சாலை விபத்து பதிவுடன் உள்ளது.


மூன்றாம் இடத்தில் கர்நாடகா 40,644 எனும் எண்ணிக்கையில் உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 63,920 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. NCBR அறிக்கைப்படி தமிழகத்தில் 57,228 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன, இவற்றின் மூலம் 10,525 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.


இதேபோல், மத்திய பிரதேசத்தில் 51,641 விபத்துகளில் 11,856 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில், கர்நாடகாவிலும் 40,644 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன; அவற்றின் மூலம் 10,951 பேர் இறந்துள்ளனர்.


சாலை விபத்துகளில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் தமிழகம் - மோசமான சாலைகளே முக்கிய காரணம்?! பெரும்பாலான விபத்துகளுக்கு சாலை விதிகளை மீறுவதும், இருசக்கர வாகனத்தில் செல்வோர் மொபைலில் பேசிக்கொண்டு செல்வதும், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் செல்வதும், குடி போதையில் வாகனங்கள் ஓட்டுவதும் முக்கிய பங்காக உள்ளது. இவை தவிர்த்து மோசமான சாலைகளாலும்,


இரவு நேரத்தில் விளக்குகள் சரிவர எரியாததாலும்,நெடுஞ்சாலைகளில் உள்ள அபாய பகுதிகளை கண்டறிந்து சரி செய்யாமல் இருப்பதாலும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துகள் நிகழ்வதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா