எஸ்பிபியின் உடல் பண்ணை வீட்டில் அடக்கம்..

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 50 நாட்களாக அனுமதிக்கப்பட்டார்.


சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14ம் தேதி மோசமடைந்தது. பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


சில நாட்களில் கொரோனாவில் இருந்து மீண்டார்உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரதுமகன்சிலதினங்களுக்குமுன்புகூறினார்ஆனால், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பண்ணை சமடைந்ததுஉடல்நிலையில்திடீர்பின்னடைவுஏற்பட்டுள்ளது என்றும், அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.


இந்தநிலையில் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் எஸ்பிபி காலமானார் என வெங்கட்பிரவு டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஆக., 5 முதல், சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார


எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளுடன், லண்டன் டாக்டர்கள் குழுவின் ஆலோசனையுடன் அவருக்கு சிகிச்சை நடந்து வந்தது. தொடர்ந்து அவரது உடல் மெல்ல மெல்ல முன்னேற்றம் அடைந்தது. கொரோனா நெகட்டிவ் என வந்தபோதும், நுரையீரல் தொற்று முழுவதையும் குணப்படுத்தும் சிகிச்சைகள் தீவிரப்படுத்தப்பட்டன. உணவு எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அவரது உடல்நிலை தேறி வந்த நிலையில் நேற்று முன்தினம்(செப்.,23) இரவு முதல் அவரது உடல்நிலை திடீரென மிகவும் மோசமானது.


மிகவும் மோசமானதுதொடர்ந்து தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (செப்.,25) நண்பகல் 1:04 மணிக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் (75), காலமானார்இந்த தகவல் அவரது மகன் சரண் உறுதிப்படுத்தினார்.


உயிர்காக்கும் கருவி மூலம் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக உயிர்பிரிந்தது' என எம்ஜிஎம் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் இன்று மாலை நுங்கம்பாக்கம்காம்தார் நகரில் உள்ள வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டுநாளை காலை வரை அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அவரது உடல், செங்குன்றம் தாமரைபாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது.


எஸ்பிபியின் கடைசி எஸ்பிபியின் கடைசி வீடியோ..


பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியன் கொரோனாவால் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு கொரோனா உறுதியானதும் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பது: எனக்கு கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல் விட்டு விட்டு வந்தது, அதேபோல் சளியும் இருந்ததால், நான் கொரோனாடெஸ்ட் மேற்கொண்டேன்.


டெஸ்டின் முடிவில் கொரோனா பாசிடிவ்எனவந்தது. இருப்பினும் அது பயப்படும் படியாக இல்லை, டாக்டர்கள் என்னை வீட்டிலேயே தனிமை படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். ஆனால் நான் தான் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று கொள்வதாக கூறி இங்கு வந்தேன். பாக்டர்கள் என்னை நல்ல முறையில் கவனிக்கிறார்கள். சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவேன். எனக்கு யாரும் தொலைபேசியில் அழைக்க வேண்டாம். நான் ஓய்வில் இருப்பதால் அழைப்புகளை ஏற்பதில்லை என கூறியுள்ளார்.


மெட்ராஸ் மாகாணம் இருந்தது. இந்திய ”பாடும் நிலா” அஸ்தமானது ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ர மணியம் என்கிற எஸ்பிபி 1946 ஆம் ஆண்டு ஜூன் 4ம் தேதி பிறந்தார். நெல்லூர் மாவட்டம் அப்போது மெட்ராஸ் மாகாணம் இருந்தது. தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது) புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் விளங்கிய எஸ். பி. பி. என்ற மூன்றெழுத்துகளால் ரசிகர்களால் அன்போடு அழைக் கப்பட்டவர். 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடிய தில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார்.


1966 முதல் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல் களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல் களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் எஸ்பிபி இடம் பிடித்துள்ளார். திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக வித்தகராக திகழ்ந்தார். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷண் விருதும் வழங்கியது.


இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது. 74வயதாகும் எஸ்பிபி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலை யில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இயற்கை எனும் இளைய கன்னி, ஆயிரம் நிலவே வா, நந்தா நிலா நிலா நிலா, காதலின் தீபம் ஒன்று என இவரின் நெஞ்சில நிறைந்த ஆயிரக்கணக்கான பாடல்களை அடுக்கி கொண்டே போகலாம்.


அரை நூற்றாண்டுக்கு மேல் இந்திய யில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இயற்கை எனும் இளைய கன்னி, ஆயிரம் நிலவே வா, நந்தா நிலா நிலா நிலா, காதலின் தீபம் ஒன்று என இவரின் நெஞ்சில நிறைந்த ஆயிரக்கணக்கான பாடல்களை அடுக்கி கொண்டே போகலாம். அரை நூற்றாண்டுக்கு மேல் இந்திய ரசிகர்களை தனது குரலாம் மயக்கி வைத்திருந்த இந்திய பாடும் நிலா அஸ்தமனமானது. அவரின் மறைவுக்கு பள்ளிவாசல் முரசு கண்ணீருடன் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறது.