வீடு தேடி வரும் கஞ்சா பொட்டலம்... மதுரை மாணவர்களை குறிவைத்தவர் கைது..!

மதுரையில் ஒரு கஞ்சா பொட்டலம் வாங்கினால் மற்றொரு கஞ்சா பொட்டலம் இலவசம் எனக் கூறி, சம்பந்தப்பட்ட நபர்களின் வீட்டிற்கே சென்று விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வாட்ஸ்ஆப் மூலமாகவும், வீட்டிற்கே சென்றும் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


இதனைத்தொடர்ந்து போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.


அப்போது ஒரு இரு சக்கர வாகனம் காவலர்கள் மறித்தும் நிற்காமல் சென்றதாகத் தெரிகிறது. image இதனைத்தொடர்ந்து அவர்களை போலீஸார் விரட்டிப்பிடித்து சோதனை செய்தனர்.


அப்போது அவர்களிடம் 8.5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தினர்.


“ இந்த விசாரணையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது மதுரை பெத்தானியபுரத்தைச் சேர்ந்த ராஜ பாண்டி என்பதும் அவர் மாணவர்களை குறி வைத்து, ஒரு கஞ்சா பொட்டலம் வாங்கினால் மற்றொரு கஞ்சா பொட்டலம் இலவசம் எனக் கூறி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு