எஸ்.பி.பிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் - விவேக் கோரிக்கை

தனது வசீகரக் குரலால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள், திரைத்துறையினர், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.


இந்நிலையில் நேற்று எஸ்.பி.பி.யின் உடல் தமிழக காவல்துறையின் மரியாதையுடன் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் இருக்கும் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


எஸ்.பி.பி பெயரில் தேசிய விருது வழங்க வேண்டும், அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என திரையுலகினர் பலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில் நடிகர் விவேக், எஸ்.பி.பி.க்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.


இதுகுறித்து நடிகர் விவேக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ““கடந்த 50 ஆண்டுகளாக இந்தியத் திரை மொழிகள் பலவற்றில் 42 ஆயிரம் பாடல்களுக்கும் மேலாகப் பாடி, ‘கின்னஸ்’ சாதனை செய்திருக்கிறார். மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இது தவிர, பல ஆயிரம் பக்திப் பாடல்களைப் பாடி ஆன்மிகத்துக்கும் சேவை செய்து இருக்கிறார்.


படிக்க: டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு எஸ்.பி.பி போட்ட நெகிழவைக்கும் நிபந்தனை: தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல். 72 படங்களில் நடித்து இருக்கிறார். 46 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். சிறந்த இந்தியக் குடிமகனாக திகழ்ந்து இருக்கிறார்.


இத்தனை சிறந்த இசைக் கலைஞருக்கு இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று தமிழ்த் திரையுலகம் சார்பாகவும், கோடிக்கணக்கான ரசிகர்கள் சார்பாகவும் வேண்டிக்கொள்கிறேன்". இவ்வாறு நடிகர் விவேக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு