சசிகலா வெளியே வருவதால் அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சசிகலா வெளியே வருவதால் அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திரைத் துறையினருக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.


தொடர்ந்து சசிகலா வெளியே வர இருப்பதால் அதிமுகவில் மாற்றம் ஏற்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதிமுகவில் எந்த மாற்றத்தையும் யாராலும் (சசிகலா) ஏற்படுத்த முடியாது.


முதல்வர் மற்றும் துணை முதல்வர் வழிகாட்டுதலுடன் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுகவில் மாற்றத்தை எந்த சக்தியாலும் முடியாது. சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ - 


அரியர்ஸ் வைத்தள்ளவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்பை மக்களும் மாணவர்களும் வரவேற்றுள்ளனர். இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றவர்கள் மாணவர்கள் நலனுக்கு எதிரானவர்கள் என்றுதான் கூறவேண்டும்.


ஏ.ஐ.சி.டி.சி விதிமுறைகளின்படி அரியர்ஸ் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு