கேள்வி நேரம் ரத்து; மாணவர்களை மட்டும் தேர்வு எழுதச் சொல்கிறார்கள் - ஒவைசி

நாடாளுமன்ற அமர்வில் கேள்வி நேரத்தை வேண்டாம் என்று கைவிட்ட மத்திய அரசு மாணவர்களை மட்டும் தேர்வு எழுதச் சொல்கிறார்கள் என ஹைதராபாத் எம்பி அசாவுதீன் ஒவைசி கேள்வி எழுப்பினார்.


அனைத்திந்திய மஸ்ஜிதே இதிஹாதுல் முஸ்லிம் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி, நாடாளுமன்ற அமர்வில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.


கொரொனா காலத்தில் கூடும் நாடாளுமன்ற அமர்வில் பிரதமர் மோடி கேள்வி நேரத்தை ரத்து செய்து செய்கிறார் ஆனால் மாணவர்களை மட்டும் நீட் ,ஜேஇஇ தேர்வுகளை எழுதச் சொல்கிறார்.


கேள்வி நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் நெருக்கடி குறித்து கேள்விகளை எழுப்ப முடியுமா,கேள்வி நேரம் இல்லாததால் கிழக்கு லடாக்கில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி விவாதங்களை நடத்த முடியுமா என்பது எங்களுக்குத் தெரியாது என ஓவைசி தெரிவித்தார்.


கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்சினைகளை குறித்து பல நாடுகளின் பிரதமர்கள் பத்திரிக்கையாளரை சந்திப்புகளை நடத்தி வருவதாகவும் அதேநேரத்தில் மோடி வீடியோ செய்திகளை மட்டும் வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.


 


Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு