இந்தி திணிப்பு பிராந்திய மொழிகளை வீழ்த்தும் செயல் : பாஜக ஆதரவு எம்.பி சுமலதா கேள்வி!

நடிகையும் மாண்டியா தொகுதியின் பாஜக ஆதரவுப் பெற்ற சுயேட்சை எம்.பியுமான சுமலதா இன்று இந்தி திணிப்புக்கு எதிராக பேசியுள்ளது பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்தவர் நடிகை சுமலதா. இவர், நடிகர் ரஜினியின் முரட்டுக்காளை, கழுகு படங்களில் ஹீரோயினாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முரட்டுக்காளை படத்தில்


இவர் ரஜினியை தேடிக்கொண்டு வரும் ’மாமன் மச்சான்’ ஹிட் லிஸ்டில் இப்போதும் இருக்கும் பாடல். image ரஜினி, மம்முட்டி, கமல்ஹாசன் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்களுடன் நடித்து புகழ்பெற்றவர்.


இவரது கணவர் நடிகர் அம்பரீஷ் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அமைச்சராகவும் எம்.பியாகவும் இருந்தவர். (பிரியா படத்தில் ஸ்ரீதேவியுடன் ’டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ’ பாடலில் டூயட் பாடியவர் இவரேதான்). கடந்த 2018 ஆம் ஆண்டு மாரடைப்பால் இறந்துவிட்டார்


ஆனால், இவர் பிறந்த, வெற்றிபெற்ற தொகுதியான மாண்டியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில், இவரது மறைவுக்குப் பிறகு போட்டியிட நடிகை சுமலதா வாய்ப்பு கேட்டார். 


அம்பரீஷுடன் சுமலதா ஆனால், காங்கிரஸ் கட்சி மறுத்து கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமிக்கு சீட் வழங்கியது.


இதனால், விரக்தியடைந்த சுமலதா சுயேட்சையாகவே போட்டியிட்டார். இவருக்கு பாஜக நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், சுமலதா மாண்டியா தொகுதியில் அமோகமாக வெற்றி பெற்று மக்களவைக்குள் சென்றார். இந்நிலையில், பாஜக ஆதரவில் வெற்றி பெற்றுவிட்டு இன்று அக்கட்சியையே இந்தி திணிப்புக்காக எதிர்த்துள்ளார். 


குமாரசாமி மகன் நிகில் குமாரசாமி மழைகால கூட்டத்தொடர் நடந்துவரும் சூழலில் “ கன்னட மொழியையும் மக்கள் நாடு முழுவதும் பேசுகிறார்கள்.


கன்னட மொழிக்கு பாரம்பரியமான வளமான மொழி. இந்தி திணிப்பு என்பது என்பது பிராந்திய மொழிகளுக்கு எதிரானது” என்று பேசியுள்ளது பாஜக தலைவர்களை சர்ச்சையில் ஆழ்த்தியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு