ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் - குவியும் பாராட்டு..

ஆந்திரப்பிரதேசத்தில் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் பாதுகாப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவம் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.


ஒய்.எஸ்.ஆர்., மாவட்டத்திலிருந்து விமானம் மூலம் வந்த கன்னாவரம் விமான நிலையத்துக்கு வந்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தடப்பள்ளியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.


அப்போது, விஜயவாடாவை நோக்கி காயமடைந்த நபருடன் ஆம்புலன்ஸ் வாகனம் சென்றுகொண்டிருந்தது. இதனைப் பார்த்த முதலமைச்சர், ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்படி, ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கு வழிவிடப்பட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா