கோலம் போட்ட பெண்ணை… கொன்று போட்ட விஜய் ரசிகர்..! ல்தகா சைஆவால் பயங்கரம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிகாலையில் கோலம் போட வீட்டில் இருந்து வெளியில் சென்ற தலைமை ஆசிரியர் மனைவி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


காதலுக்கு இடையூறாக இருந்ததால் நிகழ்ந்த பயங்கரம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு மயிலாடுதுறை மாவட்டம். சீர்காழி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆனந்தஜோதி, அரசு பள்ளி தலைமை ஆசிரியரான இவரது மனைவி சித்ரா. இவர் கடந்த 18ந்தேதி கோலம் போட வெளியில் சென்ற போது அங்கு இரும்பு குழாயுடன் மறைந்திருந்த இளைஞர் ஒருவர் , சித்ராவை தலையில் சராமாரியாக தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.


பக்கத்து வீட்டில் உள்ள சிசிடிவியில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணையை முன்னெடுத்தனர் காவல்துறையினர். சித்ரா அதிகாலையில் கோலம் போடவரும் தகவல் கொலையாளிக்கு முன் கூட்டியே தெரிந்தது எப்படி ? ஒருவேளை கொலையாளி ஏற்கனவே அறிமுகமான நபராக இருக்கலாமோ ? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.


அவரது வீட்டில் வாடகைக்கு இருக்கும் பிருந்தா என்ற பெண்ணை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். பிருந்தாவிற்கு 3 வயதில் குழந்தை உள்ள நிலையில் அவரது கணவர் சிங்கப்பூரில் வேலைபார்த்து வருவதும், பிருந்தாவை தேடி எம்.சாண்ட் வியாபாரம் செய்யும் செய்யது ரியாஸ் என்ற இளைஞர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றதும் தெரியவந்தது.


இதையடுத்து ரியாஸை பிடித்து விசாரித்த போது, பிருந்தாவின் தந்தை டைல்ஸ் ஒட்டும் வேலையை ஒப்பந்தம் எடுத்து செய்துவருவதால் அது தொடர்பாக பணம் கொடுக்கல் வாங்கலுக்காக பிருந்தாவீட்டுக்கு வந்து சென்றதாக தெரிவித்தார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு