பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான இருவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட்டம்

மத்திய பிரதேசத்தில் சிறுமியை வன்கொடுமை செய்தவனுக்கு கைதான இருவர் போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓட்டம்!


மத்திய பிரதேச மாநிலம் வரலாற்றில் கடந்த வாரம் 12 வயதான ஒரு சிறுமியின் உடல் கொலை செய்யப்பட்ட நிலையில் மக்காச்சோள தோட்டம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.


பிரேத பரிசோதனையில் சிறுமி கும்பலாக வன்கொடுமை செய்யப்பட்டு குளத்து தண்ணீரில் தலையை அமுக்கி கொன்று, உடலை மக்காச்சோள தோட்டத்தில் வீசிச் சென்றது தெரியவந்தது. இக்கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்நிலையில் இக்கொலையில் வழக்கில் அடையாளம் காணப்பட்ட அதே ஊரைச் சேர்ந்த கல்லு, தீபக் மற்றும் ரவி என்ற மூன்று வாலிபர்களை போலீசார் பிடித்து சென்றனர். இவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட வழியில் தீபக் மற்றும் ரவி இருவரும் போலீஸ்காரர்களை தள்ளிவிட்டு சென்றனர்.


இந்த நிலையில் தப்பி ஓடிய இருவரின் படங்களையும் போலீசார் வெளியிட்டு இவர்களைக் குறித்து தகவல் தருவோருக்கு 10 ஆயிரம் சன்மானம் அறிவித்துள்ளனர் மேலும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்திய கொலை வழக்கில் கைதானவர்களில் தப்பி ஓடிய சம்பவம் அம்மாநிலத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு