ஏழைகளின் வங்கி சேமிப்பு பணக்காரர்களுக்கு முதலீடா !

இன்று நாடு முழுவதும் உள்ள 130 கோடி பேரில் , பல கோடி நபர்கள் எந்த ஒரு வகையிலாவது காப்பீடு செய்வது என்பது அவசியமான ஒன்றாகிவிட்டது. அது அரசுடைமையாக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனம் ஆனாலும் சரி, தனியார் காப்பீட்டு நிறுவனம் ஆனாலும் சரி, இன்று வங்கிகளிலேயே காப்பீடு நிறுவனங்களும், தேசிய அஞ்சல் துறை மூலமாகவும் காப்பீடு நிறுவனங்கள் வந்துவிட்டன. இவைகளையும் பயன் படுத்தி அவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களுக்கு பிடித்தமான ஓரிடத்தில் காப்பீடு செய்து கொள்ளுகிறார்கள்.


ஆனால், இந்த காப்பீட்டு விஷயத்தில், அதை திரும்ப பெறுவதில் சிக்கல்கள் நிறைய இருப்பதாகவே தெரிகிறது. சாலைவிபத்தில் உயிரழந்த ஒருவருக்கு அந்த விபத்து சம்மந்தப்பட்ட வழக்குகள், மற்றும் காப்பீடுகள் சம்மந்தப்பட்ட விசயங்கள் என்னவென்றே தெரியாமல் போய்விடுகிறது.


அது பற்றிய விஷயங்களை முழுமையான தகவல்களை காப்பீட்டு நிறுவனத்திற்கு உரியவர்களே காப்பீடு செய்து இருக்கக்கூடிய நபர்களுக்கோ அல்லது காப்பீடு பெறக்கூடிய சூழலில் வரக்கூடிய சமயத்திலோ அவர்கள் அவர்களிடம் முழுமையாக எதையும் கூறாமல் மறைத்து வைத்து வருகிறார்கள்.


ஒருவர் அரசுடமை வங்கியில் வங்கிகணக்கு வைத்திருந்தாலே, மாதம் ஒருரூபாய் பிடித்தம் செய்யும் மத்திய அரசின் பிரதம மந்திரி விபத்துகாப்பீட்டில் இணைந்து இருக்கிறமோ என்று வங்கி மேலாளரை சந்தித்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.


அடுத்து சாலைவிபத்தில் பாதிக்கப்பட்டு காயமடைந்தாலோ, உயிரிழந்தாலோ, வங்கி ATM CARD வைத்து இருந்தால் காப்பீட்டுத்தொகை கிடைக்கும். இந்த விசயம் இன்னும் அநேகர் கேள்விப்படாத ஒன்றாக கூட இருக்கும். இப்போது ஒரு சில விசயங்களை முன்வைக்க வேண்டியுள்ளது.


1)வங்கிகளில் பிரதம மந்திரி காப்பீடு திட்டம், ஏடிஎம் கார்டு வைத்திருக்கும் வங்கி வாடிக்கையாளருக்கான காப்பீடு திட்டம் பற்றி அறிந்தவர்கள் எத்தனைபேர்?


2)இந்த காப்பீடுகள் பற்றி எந்த வங்கிகளாவது வெளியரங்கமாக வாடிக்கையாளர்களிடம் பேசி அதில் இணைய வற்புறுத்தியிருக்கிறார்களா? ஒருவருக்கு நான்கு வங்கியில் கணக்கு இருந்தாலும், வங்கியோ அதன் ஊழியர்களோ இதுபோன்ற விசயத்தை கூறியது இல்லை.


3)மக்கள் பெரும்பாலும் அறியாத இந்த விசயங்களை பற்றி வங்கிகள் அக்கறை காட்டாமல் இருப்பது ஏன்?? அப்படியே அறிந்து விண்ணப்பித்தாலும், அந்த வங்கியுடன் டையப் வைத்துள்ள காப்பீட்டுநிறுவனங்கள். அந்த விண்ணப்பங்களை பெரும்பாலும் ஏதோ ஒரு காரணத்தை சுட்டிக்காட்டி நிராகரிப்பதிலேயே குறியாய் இருப்பது ஏன்.???


4)ஒரு மரணம் நிகழ்ந்த குடும்பத்தில் அதுவும் விபத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தில் உள்ள நெருங்கிய உறவுகள் அந்த துன்பநிகழ்வில் இருந்து மீண்டு வர எவ்வளவு நாட்கள் ஆகும், என்ற உளவியல் ரீதியான ஒரு விசயத்தைக்கூட நினைத்துப்பார்க்காமல் 90 நாட்களில் விண்ணப்பிக்க சொல்வது என்னமாதிரியான நடைமுறை.


5) கார் லோன்மேளா, வீட்டுக்கடன் லோன்மேளா, ஒருபவுனுக்கு அதிகபணம், குறைந்த வட்டி என்று விளம்பர பதாகைகளை வங்கிக்கு உள்ளேயும் வெளியேயும் வைத்து விளம்பரப்படுத்தும் வங்கிகள். இதுபோன்ற காப்பீடுகள் பற்றிய விபரங்களை விளம்பரப்படுத்தி வைக்க முன்வருவதில்லை. அதேவேளையில் வங்கி வாடிக்கையாளர்களிடம் இதுபற்றி விழிப்புணர்வு செய்யவோ காப்பீடுதிட்டத்தில் இணையவோ சொல்வது இல்லையே என்பதுதான் வேதனையான விசயம்.


எந்த வகைய விசயம். எந்த வகையான காப்பீடு செய்திருந்தாலும், அவர்களுடைய காப்பீட்டுத் தொகை கிடைக்க வேண்டிய காலத்தில் கிடைத்தால் ஏதோ அடமானம் வைத்த நகையை திருப்பி திருமணம், கல்வி மற்றும் தொழிலுக்கு உதவியாக இருக்கும்.


வங்கித்துறையில் இனிமேலாவது, ஒரு சம்பரதாயத்துக்காகவாவது இந்த காப்பீடு பற்றிய விசயங்களை ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.


முக்கியமாக இந்த காப்பீடுகள் குறித்த விளம்பரபதாகைகளை அதிலும் குறிப்பாய் ATM கார்டு காப்பீடு பற்றி விளம்பரப்படுத்துங்கள். அது கஷ்டப்படும் ஏழைக் குடும்பத்தின் கல்வி, திருமணம், தொழில் சம்பந்தப்பட்ட கனவுகளின் ஆறுதல் அளிக்கும் நல்ல விளம்பர சேவையாய் இருக்கும்.


இன்றைக்கு தேசிய அரசுடமை காப்பீட்டு நிறுவனங்கள் மூலம், காப்பீட்டுத் தொகை பெற வேண்டிய உரிய நபர்களுக்கு போய் சேராமல் சரியான தகவல்கள் கோரப்படாமலும், கிடைக்கப் பெறாமலம், அதைப்பற்றிய தகவல்களை உரிய நபர்களுக்கு அறிவுறுத்த படாததாலும், தேசிய அரசுடமை காப்பீட்டு நிறுவனங்களில் பல லட்சம் கோடி காப்பீட்டுத்தொகை அப்படியே கிடப்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இப்படி கைவிடப்பட்ட காப்பீட்டு நிறுவன தொகை பல லட்சம் கோடிகள் தான் திரும்பவும் ஆர்பிஐ க்கு சென்று பல்வேறு அரசுடைமை வங்கிகளுக்கு திரும்ப கிடைக்கிறது என்றும் அப்படி கிடைக்கக்கூடிய பல லட்சம் கோடிகளை தான் இன்றைக்கு பல்வேறு தொழிலதிபர்கள், தங்கள் தொழிலுக்கு முதலீட்டு கடனாகப் பெற்றுக் கொண்டு, அதைத் திரும்பச் செலுத்த முடியாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி இருக்கிறார்கள் என்றும்; இதனால் தான் வங்கியில் வாராக் கடனாக இது இன்றளவுக்கும் இருப்பதாகவும், அந்த கடனை அவர்கள் வாராக் கடனாக கழித்து விடுவதாகவும் கூறுகிறார்கள்.


ஆனால், காப்பீடு செய்த ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கங்கள் கைவிரி நிலையிலேயே இன்றும் இருக்கிறார்கள் என்பது நிதர்சனமாகிறது.


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு