இன்று முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கம் : தமிழகத்தில் இருந்து 3 ரயில்கள் இயக்க ஏற்பாடு

மத்திய-மாநில அரசுகளின் ஊரடங்குத் தளர்வு அறிவிப்பைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இன்று முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து 3 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.


சென்னை சென்ட்ரல் - டெல்லி, சென்னை சென்ட்ரல் - சாப்ரா இடையே இருமார்க்கத்திலும் இன்று முதல் ரயில்கள் இயக்கப்படும். வரும் 15ஆம் தேதி முதல் திருச்சி-ஹவுரா இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.


இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 10ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.


புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் திரும்பிவருவதற்காக சிறப்பு ரயில்கள் விடப்படுவதாகவும், மாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் கூடுதல் ரயில்களை இயக்க தயார் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.