பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 74 உற்சவர் சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு..

புதுச்சேரியில் பறிமுதல் செய்யப்பட்ட 74 பழமைவாய்ந்த சிலைகளை, கும்பகோணம் நீதிமன்றத்தில் தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஒப்படைத்தனர். புதுச்சேரி ரோமண்ட் ரோலண்ட் வீதியில் உள்ள தனியார் கட்டடத்தில், வெளிநாட்டிலிருந்து பல சிலைகள் கடத்தி கொண்டு வரப்பட்டு இருப்பதாக தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.


என்னதான் சார் பண்ணப் போறீங்க? உங்களுக்கே நியாயமா இருக்கா சாரே- தங்கம் தென்னரசு கேள்வி இதனையடுத்து அங்கு நடைபெற்ற சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ஐம்பொன் மற்றும் 14 கற்சிலைகள் உள்பட 74 சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் அனைத்தும் கோயிலில் வைத்து வழிபடும் உற்சவர் சிலைகள் எனவும், அவற்றின் மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய் எனவும் சிலைகடத்தல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.